குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை நடிகர் சந்தானம் ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தார்…

மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்து நடிகர் சந்தானம் பேட்டி

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் நடிகர் சந்தானம் நடிப்பில் இன்று வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை நடிகர் சந்தானம் ரசிகர்களுடன் கண்டு களிக்க திரையரங்கிற்கு வருகை தந்தார். அப்போது நடிகர் சந்தானத்திற்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பில் மேளம் தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டுகளித்தார்.

தொடர்ந்து செய்திகளை சந்தித்து பேசிய நடிகர் சந்தானம்.

ரசிகர்களுடன் படம் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று நம்பிக்கை உள்ளது. குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து இரண்டு மணி நேரம் மகிழ்ச்சியாக பார்க்க சிறந்த படமாக உள்ளது எனவும் கூறினார்.

அதன்பின்னர் நடிகர் சந்தானத்தின் 50 அடி கட் அவுட்டிற்கு பால் அபிஷேகத்தை ரசிகர் செய்தனர்.