
ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆண்டுதோறும் விஜயதசமி அன்று நாடு முழுவதும் பேரணிகளை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பேரணி நடத்த திட்டமிட்ட போது உரிய அனுமதி கிடைக்காததால் ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு கோர்ட் அனுமதியுடன் தமிழ்நாடு முழுவதும் 55 இடங்களில் பேரணி நடத்தப்பட்டது. குரோம்பேட்டையில் நடந்த பேரணியில் மத்திய மந்திரி எல். முருகன் ,பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், ஆர் எஸ் எஸ் பொறுப்பாளர் பத்மகுமார், மாவட்ட தலைவர்கள் சீதாராமன், ராதாகிருஷ்ணன், தொழிலதிபர் ராதாகிருஷ்ணன், நரசிம்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் பேரணி அமைதியாக நடைபெற்றது. அனைவரும் ஆர். எஸ். எஸ் சீருடை அணிந்து இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.