தாம்பரம் மாநகராட்சி 2 வது மண்டலம் 26 வது வார்டு பகுதியில் நடைபெற்ற அரசு காப்பீட்டு அட்டை பதிவு செய்தல் சிறப்பு முகாமில் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கட்டபட்டு அடுத்த மாதம் திறக்கபடும் என சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தெரிவித்தார்.

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 வது மண்டலம் 26 வது வார்டு கழக திமுக சார்பில் அரசு காப்பீட்டு அட்டை பதிவு செய்தல் சிறப்பு முகாம், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் பல்லாவரம் 2 வது மண்டல குழுத் தலைவர் ஜோசப் அண்ணாதுரை, 26வது வார்டு மாமன்ற உறுப்பினர் புஸிராபானுநாசர் முன்னிலையில் குரோம்பேட்டை ராதாநகர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, பொதுமக்களுக்கு காப்பீட்டு அடையாள அட்டைகளை வழங்கினார். இதில் மதிமுக மாவட்ட துனைச் செயலாளர் குரோம்பேட்டை நாசர், பகுதி செயலாளர் பெர்னாட், வட்ட கழக செயலாளர் முஜிப்பூர்ரஹ்மான், மதிமுக மார்டின் கரண்சிங், ராமகிருஷ்ணன், ராமமூர்த்தி உட்பட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

காப்பீடு அட்டை வழங்கும் முகாமில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் காப்பீடு பெறவேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும் ஒரு அடையாள அட்டை 65 ரூபாய் வீதம் இதுவரை 37 ஆயிரம் காப்பீடு அட்டைகளை தனது சொந்த செலவில் செய்துள்ளதாகவும் மேலும் குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் 100 கோடி ரூபாய் செலவில் புதிய மருத்துவமனை 6 மாடியுடன் 400 படுக்கை அறைகள் கட்டபட்டு ஒரிரு மாதங்களில் திறக்கபட உள்ளதாகவும் அதே போல் குழந்தைகள் மருத்துவமனை 51/2 கோடி ரூபாய் செலவில் கட்டபட்டு அடுத்த மாதம் திறக்கும் தருவாயில் உள்ளதாக தெரிவித்து இனி பொதுமக்கள் தரமான சிகிச்சையை இங்கேயே பெறலாம் என கூறினார்.