
குரோம்பேட்டை புருஷோத்தம நகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் குரு பெயர்ச்சி முன்னிட்டு குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் இதனைத் தொடர்ந்து சிறப்பு நவகிரக பரிகார ஹோமம் அபிஷேகம் ஆராதனைகள் வெகு விமர்சையாக நடைபெற்றன காலை
10மணிக்கு அனுக்ஜை, .
விக்னேஸ்வர பூஜை.ஹோம சங்கல்பத்தை தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது
காலை 11:30 மணிக்கு குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன நண்பகல் 12:30 மணி அளவில் மகா தீபா தாரனை மந்திர புஷ்பம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்