தாம்பரம் அருகே பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த பட்டேல் நகரை சேர்ந்தவர் மாதவன் (23) பி.காம் பட்டதாரியான இவர் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தினமும் பெற்றோரிடம் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று இரவும் வழக்கம் போல் மது அருந்திவிட்டு பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாதவன் தாம்பரம் மேம்பாலத்திற்க்கு நடந்தே வந்தவர் 50 அடி உயரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.