
கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு வசதியாக அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் விளம்பர தட்டிகள் போன்றவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் என்ற உதவியுடன் இடித்து அகற்றினர்.
பூட்டு போட்டு வைக்கப்பட்டிருந்த தள்ளு வண்டிகளையும் அகற்றி எடுத்துச் சென்றனர் இவற்றை அகற்றுவதற்கு அவகாசம் கொடுக்காமல் மாநகராட்சி நடவடிக்கை எடுத்ததால் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் . எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது