
டெல்லி:டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷனில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை ஆராதனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கிறிஸ்துமஸ் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை குறிப்பதுடன் நம்பிக்கை, அமைதி, மன்னிப்பு, அன்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தி கதீட்ரல் ஆஃப் ரிடம்ஷன் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் உள்ள தி கதீட்ரல் ஆஃப் ரிடம்ஷன் தேவாலயத்தில் இன்று காலை கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றேன். சிறப்பு பிரார்த்தனை அன்பு, அமைதி, மற்றும் கருணை ஆகிய காலத்தால் அழியாத செய்தியை பிரதிபலித்தது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்ல எண்ணத்தையும் தூண்டட்டும்” என கூறியுள்ளார்.