கேளம்பாக்கம் அருகே கார் மீது மோதிய இருசக்கர வாகனம் நிலைத்தடுமாரி கீழே விழுந்ததில் லாரி மோதி கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

சென்னை ஓ.எம்.ஆர் சாலை படூர் பகுதியில் செயல்படும் ஹிந்துஸ்தான் கல்லூரியில் 2ம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர் ஹாரிஸ் ஜான்(19) இவரின் நண்பர் ஷேக்பாஷா(27) இருவரும் கிழக்கு கடற்கரை சாலை கோளத்தில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தபோது எதிரே வந்த காரின் பின்பக்க டோரில் இடித்ததில் இருசக்கர வாகனத்துடன் நிலைத்தடுமாரி சாலையில் விழுந்துள்ளனர். அப்போது காரின் பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் பிரேதங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் கார் மற்றும் லாரி ஓட்டுனர்களான தியாகராஜன், இளங்கோ ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.