கரூர் நீதிமன்றத்தில் வாய்தாவிற்காக ஆஜராகி திரும்பி வரும்பொழுது கரூர் புறவழி சாலை தடா கோவில் அருகே மதுரை அனுப்பானடியை சேர்ந்த ராமர்பாண்டி என்ற ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை, உடன் வந்த முத்துராஜா படுகாயங்களுடன் கரூர் மருத்துவமனையில் அனுமதி, இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு தேவர் குருபூஜைக்கு சென்று வரும்போது மதுரை அவனியாபுரம் பகுதியில் வெடிகுண்டு வீசி 7 பேர் இறந்த வழக்கில் முதல் குற்றவாளி ராமர்பாண்டி என்பது குறிப்பிடத்தக்கது