
2026-ல் அதிமுக ஆட்சி மலர்ந்ததும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என்று அதிமுக அமைப்புச் செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்எல்ஏவுமான வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மதுரைக்கு திமுக அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. தற்போது முதல்வர் திடீரென மதுரையின் வளர்ச்சி பற்றி பேசுவது வியப்பளிக்கிறது. திருப்பரங்குன்றத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். என்றார்