
புதுதில்லியில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களை, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் மற்றும் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் தலைமையில், மீன்வளம் & மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் கா.நவாஸ் கனி, தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், மீன்வளத்துறை இயக்குநர், இரா.கஜலட்சுமி, புது தில்லி தமிழ்நாடு இல்லம் கூடுதல் உள்ளுறை ஆணையாளர் ஆஷிஸ் குமார், மீனவர் சங்க பிரதிநிதிகள் ராயப்பன், சேசு ராஜா, விமல் ராஜ், ஜுலியாஸ் எட்வர்ட் ஆகியோர் கொண்ட குழு சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கி, தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை குறித்து எடுத்துரைத்தனர்.