
குரோம்பேட்டை அஸ்தினாபுரம் இறைச்சி கடை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது..
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தினாபுரம், வார்டு 38, டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிரதான சாலையில் த மீட் சாப் என்ற பெயரில் இறைச்சி கடை அமைந்து உள்ளது.
இந்த கடையை மதியம் மூன்று மணிக்கு அடைக்கிறார்கள், அப்பொழுது கடையில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியில் வைத்துவிட்டு செல்கிறார்கள்.
இரவு குப்பை வண்டி வந்து தான் கழிவுகளை எடுக்கிறார்கள் இதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்தப் பகுதியில் நடந்து செல்லவோ நிற்கவோ முடியவில்லை அவ்வளவு துர்நாற்றம் வீசுகிறது.
இந்த கடையை கடந்து செல்வோர் அனைவரும் முகத்தை மூடிக்கொண்டுதான் செல்ல வேண்டியது உள்ளது.
மேலும் அவ்வப்போது நாய்கள் கழிவுகளை எடுத்து தெருவில் வீசி செல்வதையும் காணமுடிகிறது.
மாநகராட்சியின் முதன்மை சுகாதார அலுவலர் இதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.