32nd ANNUAL SPORTS MEET 2024 – 25

Shikshaa Mat.Hr.Sec.School, Hasthinapuram celebrated their 32nd Annual Sports Meet on 14th September 2024 in grandeur. The event began with the welcoming of the Chief Guest Mr.Christin Jayasil, Asst.Commissioner of Police, Selaiyur Division by the school band and the Scouts & Guides. The event began with the prayer to the Almighty. The gathering was welcomed by […]

4 வது வார ஆடி வெள்ளி விளக்கு பூஜை

அஸ்தினாபுரம் வினோபாஜி நகரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ சதுர் குன்று விநாயகர் தேவி கருமாரியம்மன் புற்று ஆலயத்தில் ஆடி நாலாவது வார வெள்ளியை முன்னிட்டு விளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு விளக்குகளை வைத்து வழிபாடு செய்தனர்.

அஸ்தினாபுரத்தில் புதிய பாலி கிளினிக் திறப்பு

அஸ்தினாபுரத்தில் லக்‌ஷயா என்ற புதிய பாலி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் உள்ள லக்‌ஷயா பாலி கிளினிக் தற்போது குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் புதிய கிளையை திறந்துள்ளது. அஸ்தினாபுரம் பெரியார் சாலையில் பிஎஸ்என்எல் எதிரே இந்த கிளினிக் அமைந்துள்ளது. லக்‌ஷயா பாலி கிளினிக்கை திமுக பகுதி செயலாளர்ஏ.கே.கருணாகரன் மாமன்ற உறுப்பினர் திருமதி மகாலட்சுமி கருணாகரன் திறந்து வைத்தனர். மருத்துவ இயக்குனர் டாக்டர்.சித்ரா மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் அவர்களை வரவேற்றனர்.

சங்கர் கன்ஸ்ட்ரக்க்ஷன் உரிமையாளர் திரு. சங்கரநாராயணன் தம்பதியரின் குமாரன் திருவளர்ச்செல்வன் கிருத்திக்ஹரிகரன் உபநயன விழா

ராஜேந்திர பிரசாத் சாலையில் அமைந்துள்ள புதிதாக திறக்கபட்ட ஸ்ரீசாஸ்தா மஹாலில் இன்று காலை நடைபெற்றது .பத்மநாப நகர் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

மனைவியைக் கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தாம்பரம் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகர் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வரபிரசாதம் (60) இவர் கட்டிட வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி விசுவாசம் (50) இவரும் வேறு பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். மனைவி விசுவாசம் காலையில் வேலைக்கு சென்று மாலை நேரத்தில் வீட்டிற்க்கு வராமல் இரவு நேரத்தில் வீட்டிற்க்கு வந்ததால் […]

குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் பிரம்மாண்ட திருமண மண்டபம் திறப்பு

குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவனமான சங்கர் கன்ஸ்ட்ரக்சன் சார்பில் அஸ்தினாபுரம் ராஜேந்திர பிரசாத் சாலையில் ஸ்ரீ சாஸ்தா மஹால் என்ற பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருவண்ணாமலை மங்கள காளி தேவஸ்தான ஸ்ரீ கருடானந்த சரஸ்வதி சுவாமிகள், மண்டபத்தை திறந்து வைத்து ஆசி வழங்கினார்.தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம், முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன், நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் தில்லை வள்ளல்.கே […]

அஸ்தினாபுரம் இறைச்சி கடையால் சுகாதார சீர்கேடு

குரோம்பேட்டை அஸ்தினாபுரம் இறைச்சி கடை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது..தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தினாபுரம், வார்டு 38, டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிரதான சாலையில் த மீட் சாப் என்ற பெயரில் இறைச்சி கடை அமைந்து உள்ளது.இந்த கடையை மதியம் மூன்று மணிக்கு அடைக்கிறார்கள், அப்பொழுது கடையில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியில் வைத்துவிட்டு செல்கிறார்கள்.இரவு குப்பை வண்டி வந்து தான் கழிவுகளை எடுக்கிறார்கள் இதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்தப் பகுதியில் நடந்து செல்லவோ நிற்கவோ […]

அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் திறப்பு

பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் 81 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் 30 ஆண்டு கோரிக்கையான புதிய பேருந்து நிலையம், நிழற்குடைகளைபல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்தார். பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி அப்பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்து மூலம் சென்று வருவது வழக்கம்.இவ்வாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேருந்து நிலையத்தின் நிலம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.சம்பந்தப்பட்ட […]

தம்பரம்‌ மாநகராட்சி செம்பாக்கம்‌ மண்டலம்‌ வார்டு-38க்குட்பட்ட அஸ்தினாபுரம்‌ பகுதியில்‌ ரூ.70.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ கூடுதல்‌ பள்ளி கட்டடம்‌ அமைக்கும்‌ பணிக்கு மேயர்‌ வசந்தகுமாரி கமலக்ண்ணன்‌ அடிக்கல்‌ நாட்டி பணிகளைத்‌ தொடங்கி வைத்தார்

This image has an empty alt attribute; its file name is Capture-66.jpg

இந்‌நிகழ்ச்சியில்‌ பல்லாவரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ இ.கருணாநிதி, மண்டலக்குழு தலைவர்‌ ச.ஜெயபிரதீப்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

தாம்பரம் மாநகராட்சி 38 வது வார்டு மேற்கு பகுதியில் திரு வி க நகரில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் .அவர்களின் 107 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவர் உருவப்படத்திற்கு திரு.R. செல்வராஜ் அஸ்தினாபுரம் பகுதி கழக துணை செயலாளர் அவர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.