சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 3- வது முறையாக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்தார் .இம்மனு மீது இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வருகிற 12-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.