சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 47 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் வழக்கின் விசாரணையை சிறப்பு நீதிமன்றம் அக்.24க்கு ஒத்திவைத்தது. குற்றம்சாட்டப்பட்ட 2,202 பேருக்கு நகல் வழங்க H முதற்கட்டமாக 100 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் விவரம்👇🏻
கோவி.செழியன் – உயர்கல்வித்துறை. செந்தில் பாலாஜியும் – மின்சாரத்துறை. நாசர் – சிறுபான்மையினர் நலத்துறை. ராஜேந்திரன் – சுற்றுலா சுற்றுலாத்துறை
செந்தில் பாலாஜிக்கு ஜாமின்- நாட்டுக்கு தியாகம் செய்ததைபோல் சித்தரிக்க முயலும் மு.க.ஸ்டாலின்: தமிழிசை
செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் புகார்களை கூறியதே தி.மு.க.தான். ஜாமீனுக்கும், விடுதலைக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் கொண்டாடி மகிழ்கிறீர்களே
செந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு
செந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவுக்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜி இன்று வெளியே வரக் கூடாது என முடிவு செய்துவிட்டதை போல் நீதிபதி செயல்படுவதாகவும், நீதிபதியின் முடிவு புதிய நடைமுறையாக உள்ளது எனவும் நீதிபதியின் முடிவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி தரப்பின் பிணை உத்தரவாதத்தை ஏற்க சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் மறுப்பு
அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞருக்காக நீதிபதி காத்திருப்பு.
இன்னைக்குதான் ரியல் தீபாவளி
ஜாமின் வழங்கிய அடுத்த நொடி செந்தில் பாலாஜியின் சொந்த ஊரில் கொண்டாட்டத்தை தொடங்கிய தி.மு.க. தொண்டர்கள்.. பட்டாசுகளை பறக்க விட்டு “இன்னைக்குதான் ரியல் தீபாவளி” என நா தழுதழுத்து பேட்டி..!
சாட்சிகளை தொடர்பு கொண்டால் ஜாமின் ரத்து
சாட்சிகளை தொடர்பு கொண்டால் ஜாமின் ரத்து அரசு தரப்பு சாட்சிகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்ள முயன்றால் ஜாமின் ரத்தாகும் செந்தில் பாலாஜிக்கு 6 நிபந்தனைகளை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். நிபந்தனைகளை மீறினாலும் ஜாமின் ரத்தாகும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
செந்தில் பாலாஜி முதலமைச்சரை சந்திக்க திட்டம்!
செந்தில் பாலாஜி இன்று சிறையில் இருந்து வெளிவரும் பட்சத்தில் முதலமைச்சரை விமான நிலையத்தில் சந்திக்க திட்டம். முதலமைச்சரை சந்தித்த பின் மருத்துவமனை சென்று உடல் நலத்தை பரிசோதிக்க செந்தில் பாலாஜி திட்டம் என தகவல்? ஒருவேளை இன்று புழல் சிறையில் இருந்து வெளிவராமல் நாளை வெளிவந்தால் நாளை இரவு முதலமைச்சரை சந்திக்க திட்டம்!
செந்தில் பாலாஜி ஜாமின் நிபந்தனைகள்
மீண்டும் அமைச்சராக தடை எதையும் உச்சநீதிமன்ற நிபந்தனையாக விதிக்கவில்லை “செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களாக விசாரணை குற்றவாளியாக இருப்பதால், அவரின் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது; ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போடவேண்டும்; இவ்வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் அவர் ஒத்துழைப்பு தரவேண்டும்; இன்று மாலை அல்லது நாளை காலை அவர் சிறையில் இருந்து வெளியே வருவார்” 25 லட்ச ரூபாய் […]