தாம்பரம் மாநகராட்சி காந்தி நகரில் அப்துல் கலாம் நற்பணி சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சி 26 வது வார்டில் காந்தி நகர் A P J அப்துல் கலாம் நற்பணி மன்ற தலைவர் குலசேகரன் ஏற்பாட்டில் 80 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்,
ஜாமெண்டரி பாக்ஸ், புத்தக பை போன்ற பொருட்கள் காந்திஜி திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக 26 ஆவது வார்டு மதிமுக மாமன்ற மாமன்ற உறுப்பினர் புஸிரா பானு நாசர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் குரோம் பேட்டை நாசர், பழனி, காந்திநகர் தலைவர் சுரேஷ் MTC துணை தலைவர் மணிவண்ணன் SI பொருளாளர் பொன் குமார் கமிட்டி உறுப்பினர் ஹரிகிருஷ்ணன் தொழிலதிபர் ராஜேஷ் நந்தகோபால் திருமதி லதா பிரபாகர் அரவிந்த் துரை பாலாஜி கார்த்திகேயன் மற்றும் பலர் பங்கேற்றனர்.