
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்து வருகிறது பாமக. அதிமுக கூட்டணியிலும் பாமக நிச்சயம் இடம்பெறும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
பாமக கட்சி தற்போது ராமதாஸ் அணி அன்புமணி அணி என 2 அணிகளாக பிரிந்து கிடக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்று பாமக இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது