
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016.ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.
இதையடுத்து கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பொதுக்குழு சசிகலாவை நியமித்தது.
இதையடுத்து ஒரு சில நாட்களிலேயே உச்சநீதி மன்ற தீர்ப்பு படி ஊழல் வழக்கில் சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்கா மகன் சுதாகர் ஆகியோர் சிறை சென்றனர்.
இதையடுத்து மீண்டும் கூடிய பொதுக்குழு பொதுச்செயலாளர் பதவியை நீக்கி, நிர்வாக ரீதியாக புதிய பொறுப்புக்களை உருவாக்கியது.
இதை எதிர்த்து சசிகலா உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சசிகலாவின் மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி
கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதிசெய்து, சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.