
தாம்பரம் அடுத்த அகரம் தென் பிரதான சாலை மப்பேடு சந்திப்பு நான்கு இரண்டு கடைகள் அதிகாலை 1 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது.
மேடவாக்கம், சிறுச்சேரி உள்ளிட்ட 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயனைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரண்டு ஜெ சி பி வாகனங்கள் கட்ட பக்கவாட்டு பகுதிகளை உடைத்து செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
முதல் தகவலாக பேக்கரி மற்றும் ஹார்டுவேர் கடைகள் முழுவதும் எரிந்து நாசம் ஹார்டுவேர் கடையில் வைக்கபட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பெயிண்ட்டுகள் கொழுந்துவிட்டு எரிவதால் கரும்புகை சுற்றுவட்டத்தில் பறவி வருகிறது.
இதனால் மாடம்பாக்கம், பதுவஞ்சேரி, தலைமை செயலாக குடியிருப்பு பகுதிகளில் மூச்சுதிணறல் மக்கள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.