தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் தங்கசாமி, இவர் மனை லிலாபாய் (75), ஒய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர், கணவன் மனைவி இருவரும் அதே மாடம்பாக்கத்தில் ( வாணி மெட்ரிக்குலேஷன் பள்ளி) நடத்திவந்த நிலையில் பள்ளி அருகிலேயே உள்ள வீட்டில் முதல் தளத்தில் வசித்தனர்.

தங்கசாமி வெளியே சென்ற நிலையில் லீலாபாய் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அதிகம் புத்தகம், செய்திதாள் படிக்கும் பழக்கம் உள்ளவர்
மேலும் 5 ஆண்டுகளாக உடல் நிலை பாதித்ததால் அவர் தனக்கு தேவையான புத்தகம் பேப்பரை அருகில் வைப்பது வழக்கம், என்ணிக்கை அதிகமாக கொசுவர்த்தி ஏற்றி வைத்து இருபது வழக்கமாம்.

இந்த நிலையில் அவர்கள் நடத்தும் பள்ளியை மூடிவிட்டு சாவியை கொடுக்க வந்த நபர் பார்த்தபோது அவர் தங்கிய முதல் மாடியில் இருந்து புகை வந்துள்ளது.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது பேப்பர், புத்தகங்கள் எரிந்து வீடுமுழுவதும் புகை சூழந்த காணப்பட்டது.

மேலும் அறையில் லீலாபாய் உடல் முழுவதும் கருகிய நிலை சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த சேலையூர் காவல் ஆய்வாளர் சந்துரு, உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் தடயங்களை சேகரித்த நிலையில் பிரேதத்தை உடற்கூறு ஆய்வுகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கொசுவர்த்திகளை அதிகாமக் கொளுத்தியதால் தீவிபத்து ஏற்பட்டதா காரணம் என்ன என உறவினர்கள், அக்கம் பக்கதினரிடையே விசாரணை செய்து வருகிறார்கள்..