குரோம்பேட்டை ராதா நகர் அனுமார் கோயில் தெருவில் பொது இடத்தை தனியார் நிறுவனம் சிமெண்ட தளம் அமைத்திருக்கும் காட்சி. இதுகுறித்து அறப்போர் இயக்கத்தை சேர்ந்த டேவிட் மனோகரன் கூறும் போது ஏன் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் இப்படி தனி நபர்கள் சாலையை ஆக்கிரமித்து சிமெண்ட் தரைகள் அமைப்பதை அப்புறப்படுத்துவதில்லை என்று தெரிய தெரியவில்லை? நகர அமைப்பு பிரிவு அலுவலர்களிடம் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்வதில்லை. இப்படி பொது வழியை தனி நபர்கள் ஆக்கிரமிப்பது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. ஆகவே இந்த ஆக்கிரமிப்பை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளனர்.