
தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் ராஜிவ் நகரில் விஷ்ணு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.
இந்த அடுக்குமாடி கீழ் தளம், முதல் தளம், இரண்டாவது தளம் என 17 குடியிருப்புகள் உள்ளன.
இந்த பகுதிகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் பலர் வீட்டை பூட்டிவிட்டு வெளியேறி தங்கள் தெரிந்தவர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று சரத்குமார் என்பவர் தன் வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிச்சி அடைந்து உள்ள சென்று பார்த்த போதும் பீரோ உடைக்கப்பட்டு 17 சவரன் தங்க நகைக்கள் இரண்டு லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது.
மேலும் கண்ணண் என்பவர் வீட்டில் ஒரு 15 சவரன் தங்க நகைகளும்,
விஜயலட்சுமி என்பவர் வீட்டில்
7 சவரன் தங்க நகைகளும் மற்றும் 1 லட்சம் பணமும்,
கார்திக் என்பவர் வீட்டில் 7 சவரன் தங்க நகைகளும்
அருண் என்பவர் வீட்டில் 15 சவரன் தங்க நகைகளும் திருடு போனது தெரியவந்தது.
சம்பந்தமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கொடுத்த தகவலின் பேரில் சோமங்கலம் போலீசார் தற்போது அடுக்குமாடி குடியிருப்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளம் சூழப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி ஆறு வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.