தாம்பரம் மாநகராட்சி சார்பில் இரவு நேரத்திலும் 1000 குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்புகள் கொண்ட நிவாரண பொருட்கள் விநியோகம் அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கி வைப்பு.

தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்வேறு பகுதிகள் மிக்ஜாம் புயல் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் மழை நீர் முழுமையாக வடிந்துவிட்டது ஆனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப அத்தியாவசிய பொருட்களை
தாம்பரம் மாநகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது இரவு நேரத்திலும் மாநகராட்சி சார்பில் காய்கறிகள் தொகுப்புகள் வீடு வீடாக விநியோகம் செய்ய புறப்பட்டனர்.

அதற்கான வாகனங்களை அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, ஆணையாளர் அழகுமீனா, துணை மேயர் காமராஜ், மண்டலகுழு தலைவர்கள் டி.காமராஜ், ஜெயபிரதிப் சந்திரன்,இந்திரன்,ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்த நிலையில்

உள்ளாட்சி பிரிதிநிதிகள் காவல் துறையினர் உதவியுடன் பாதிக்கப்பட்ட 5 மண்டலங்களில் வழங்கபட்டது…