புதுடில்லி: கடந்த 2022ம் ஆண்டு நாடு முழுவதும் 1.6 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். அதிக விபத்துகள் நடந்த மாநிலங்களில், உ.பி., முதலிடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: கடந்தாண்டு சாலை விபத்துகளில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2021ல் 1,53,972 ஆகவும், 2020ல் 1,38,383 ஆகவும் இருந்தது.

அதேபோல், 2022ல் 4,61,312, 2021ல் 4,12,432, 2020ல் 3,72,181 சாலை விபத்துகள் நடந்துள்ளன.

கடந்தாண்டு, அதிகபட்சமாக உ.பி.,யில் 22,595 சாலை விபத்துகள் நடந்தன.

இதற்கு அடுத்த இடங்களில்,

தமிழகம் -17,884

மஹாராஷ்டிரா – 15,224

ம.பி., -13,427

கர்நாடகா- 11,702

டில்லியில் 1, 461 விபத்துகள் நடந்தன.

அதிவேகமாக கார் ஓட்டுதல், மொபைல் போன் பயன்படுத்துதல், போதையில் வாகனத்தை இயக்குதல், தவறான பாதையிலும், ஒழுங்கீனமாகவும் வாகனங்களை இயக்குதல், சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரிவதை கண்டு கொள்ளாது இருத்தல், ஹெல்மெட், சீட்பெல்ட் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணியாமல் இருத்தல், வாகனங்களின் மோசமான நிலைமை, மோசமான வானிலை மற்றும் சாலை, வாகனம் இயக்குபவர்கள், சாலையில் நடந்து சென்றவர்களின் தவறு காரணமாக சாலை விபத்துகள் நடந்தன. இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.