
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக லோக் சபா எம்பிக்கள் 12 பேரில், 10 பேர் கடந்த 6- ந் தேதி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
அரசியலமைப்பு சட்டப்படி ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்பதால் பாஜக தேசிய தலைவர் நட்டா தலைமையில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து 10 லோக்சபா எம்பிக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.
இவர்களில் சிலர் மத்திய அமைச்சர்களாகவும் இணை அமைச்சர்களாகவும் பதவி வகித்துள்ளனர்.
இதனால் வெகுவிரைவில் (அடுத்த வாரம்) மத்திய அமைச்சரவையில் மாற்றம் நிகழ உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பொறுப்பு ஏற்க உள்ளதாகவும், தமிழகத்தில் இருந்து பா.ஜ.க பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உட்பட 2 பேர் நியமிக்கப்பட உள்ளதாகவும் டெல்லி வட்டார தகவல்கள் உறுதிப்பட தெரிவிக்கின்றன.