திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை உடைத்துக் கொண்டு கீழே விழுந்து கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் கேரளா மாநிலத்தை சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். விபத்தில் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் கார் முழுமையாக நொறுங்கியது.இந்த விபத்து காரணமாக திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கீழே விழுந்து விபத்தில் சிக்கிய கார் மீட்கப்பட்டு விட்டது. மேலும் விபத்தில் உயிரிழந்த தம்பதியின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.