வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் மெல்ல நகர்ந்து வருகிறது.

இது டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து வெளி மாநிலத்திற்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 142 ரெயில்கள் 7ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இலாகா அறிவித்துள்ளது.