புயல் பாதிப்புகளை சமாளிக்க ஏடிஜிபி தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு தயார்

நிலச்சரிவு, மழை, வெள்ளம் போன்ற அசாதாரண சூழல்களை எதிர்கொள்ளும் பயிற்சி பெற்ற 900 போலீசார் 18 குழுக்களாக அனுப்பப்பட்டுள்ளனர்.

சென்னை, கோவை, மணிமுத்தாறு பகுதிகளுக்கு தலா 3 குழுக்களும், கடலூருக்கு 2 குழுக்களும் அனுப்பி வைப்பு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை, பழனி பகுதிகளுக்கு தலா ஒரு மீட்புக்குழு அனுப்பப்பட்டுள்ளது

164 மீட்பு உபகரணங்கள் மற்றும் 20 படகுகள் தயார் நிலையில் இருப்பதாக தகவல்

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்ட எஸ்பிக்கள் உடனும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு

அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி பெற்ற 18,000 போலீசாரும் தயார் நிலை