ஆபத்தான பாதையில்
அணிவகுத்த இளைஞர்கள்!

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 6.10 க்கு புறப்பட வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் 40 நிமிடம் தாமதமாக 6.50 க்கு புறப்பட்டு காலை 8 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலையம் வந்தது.

1 வது பிளாட்பாரத்தில் கோவை எக்ஸ்பிரஸ் வந்த அதே நேரத்தில் 2 வது பிளாட்பாரத்தில் ஜோலார்பேட்டை -சென்னை சென்ட்ரல் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்கு
பெருங்கூட்டம் 2 வது பிளாட்பாரத்தில் முண்டியடித்து நின்றது.

இரண்டு பிளாட்பாரத்திற்கும் இடையே குறுகலான பாதையில் கழிவு நீர் செல்வதற்கான சிறிய வாய்க்கால் உள்ளது.

இந்த குறுகிய ஆபத்தான பாதையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அணிதிரண்டு நின்று ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தாவி ஏறினர்.

அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்கள்
செய்வதறியாது திகைத்து நின்றனர்.