
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே எதிர் திசையில் சென்று ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மறைமலைநகர் அடுத்த பொத்தேரி பகுதியை சேர்ந்த தீபக் (23), ரூபேஷ் (24) மற்றும் நவீன் (23) ஆகிய மூவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் தீபக் தனது காரில் நண்பர்கள் மூவருடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஊரப்பாக்கம் அருகே கார் சென்றபோது தீபக்கின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனை தாண்டி எதிர் திசையில் சென்ற ஆம்னி பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தீபக், ரூபேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த நவீன் சிகிச்சைக்காக தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.