இரு தரப்பு வாதங்களை கேட்ட பின், நீதிபதிகள் கூறியதாவது: சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளவை தவிர அனைத்து குவாரி விவரங்களையும் அமலாக்கத்துறை எப்படி கோரலாம்?. விசாரணைக்கு உதவி கோருவதற்கும் சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது.

சட்ட விரோத மணல் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதா?. எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் அமலாக்கத்துறை எப்படி விசாரணை நடத்த முடியும்?. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது ஏன்?. இவ்வாறு அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.