அப்போது தமிழக அரசு தரப்பில் வாதாடியதாவது: யாரையும் பாதுகாக்கவில்லை; நடவடிக்கை எடுப்பதை விடுத்து கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியது ஏன்? மணல் குவாரி குறித்து விசாரணை நடத்துவது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமே அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கிறது. கனிமவளக் குற்றம் குறித்து மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர நடவடிக்கை எடுக்க முடியாது. குவாரி உரிமையாளர்களின் தவறுக்கு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியுமா?. என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.