நடத்தை விதிகளை மீறியதாக சிட்டி பேங்குக்கு ₹5 கோடியும், பேங்க ஆஃப் பரோடாவுக்கு ₹4.34 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ₹1 கோடியும் அபராதமாக விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

நிதிச்சேவைகள் அவுட்சோர்சிங் தொடர்பான விதிமுறைகளை மீறியது, கடன்கள் மற்றும் முன்பணம் தொடர்பான உத்தரவுகளை மீறியதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.