சென்னை, கலைவாணர்‌ அரங்கில்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு “நிறுவனங்களின்‌ நாயகர்‌ – கலைஞர்‌” சிறப்பு புகைப்பட கண்காட்சியை, நகராட்சி நிருவாகத்‌ துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு திறந்து வைத்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌ சட்டத்‌ துறை அமைச்சர்‌ எஸ்‌.ரகுபதி‌, குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன்‌‌, இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையத்‌ துறை அமைச்சர்‌ திரு. பி. கே. சேகர்பாபு‌, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்‌ ஆர்‌.பிரியா, துணை மேயர்‌ மு.மகேஷ்‌குமார்‌, டிவிஎஸ்‌ குழுமத்தின்‌ தலைவர்‌ வேணு சீனிவாசன்‌, வேலூர்‌ விஐடி பல்கலைக்கழக வேந்தர்‌‌ கோ.விசுவநாதன்‌, நகராட்சி நிருவாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌‌ தா.கார்த்திகேயன்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை இயக்குநர்‌ பி.பொன்னையா மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.