
சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (72) அப்பகுதியில் செக்யூரிட்டி வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக பல்லாவரம் ,துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக தனது சைக்காலில் ஐயப்பன் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த வாடகை கார் மோதியதில் தூக்கி வீசாபட்ட முதியவரின் இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டது.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் பலத்தகாயமடைந்த முதியவரை மட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த ஓட்டுனத் எட்வின் (28) மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.