மு.க.ஸ்டாலின்‌ (30.8.2023) முகாம்‌ அலுவலகத்தில்‌, அண்மையில்‌ அஜர்பைஜான்‌ நாட்டில்‌ நடைபெற்ற FIDE உலக கோப்பை செஸ்‌ சாம்பியன்ஷிப்‌ போட்டியில்‌ சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்த செஸ்‌ கிராண்ட்‌ மாஸ்டர்‌ பிரக்ஞானந்தா அவர்களை பாராட்டி ஊக்குவிக்கும்‌ விதமாக உயரிய ஊக்கத்‌ தொகையான 30 இலட்சம்‌ ரூபாய்க்கான காசோலை மற்றும்‌ நினைவுப்‌ பரிசு வழங்கி, வாழ்த்தினார்‌. இந்த நிகழ்ச்சியில்‌, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்‌ செயலர்‌ ஜெ.மேகநாத ரெட்டி மற்றும்‌ பிரக்ஞானந்தா அவர்களின்‌ பெற்றோர்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.