
2025இல் சீனாவின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது. 1,000 பேருக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 5.6 ஆக குறைந்துள்ளது. இது 1949ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக்குறைந்த அளவு.
குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் சீனா பல்வேறு மானியங்களை அறிவித்தாலும், அந்நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவாலை இது வெளிப்படுத்துகிறது.
சீன இளைஞர்களிடையே குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் குறைவதற்கு, குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விச் செலவுகள் அதிகமாக இருப்பதும் காரணமாக பார்க்கப்படுவதால், புதுமண தம்பதிகளுக்கு பண வவுச்சர்கள் வழங்கி, திருமணத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.