
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது உறுதி என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அமித் ஷா, “2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் என்.டி.ஏ அரசாங்கம் அமையப் போகிறது என்பதை நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். என்றார்