
கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஊட்டியில் சாக்லேட் திருவிழா தொடங்கியது. இதில் இடம்பெற்ற சாக்லேட்டால் செய்யப்பட்ட நீலகிரி மலை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
210 கிலோ சாக்லேட்டைக் கொண்டு நீலகிரி மலை போன்ற வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர். ரூ.60 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பல வகையான சாக்லேட்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்”