தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விடக் குறைவான வெப்பநிலையே நீடிக்கும்.

வட தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் இரவு நேரக் குளிர் அதிகமாக இருக்கும். அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 13°C முதல் 14°C வரை குறைய வாய்ப்புள்ளது.

சென்னை நிலவரம்:

இன்றும் நாளையும் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் நகரின் சில இடங்களில் இரவு நேர வெப்பநிலை 20°C-க்குக் கீழ் செல்ல அதிக வாய்ப்புள்ளது.