
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில் உள்ள தாம்பரம் கிறிஸ்துவ வியாபாரிகள் சார்பில் கடந்த 30 வருடங்களாக கிறிஸ்மஸ் பெருவிழா இப்பகுதியில் நடைபெற்று வருகிறது அதன்படி இந்த வருடமும் கடந்த இரண்டு நாட்களாக மார்க்கெட் பகுதியில் கிறிஸ்மஸ் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இன்று குரோம்பேட்டை நியூ லைப் ஜெம்ஸ் சபையின் தலைமை போதகர் பாஸ்டர். ஐசக் டேனியல் குழுவினர் கிறிஸ்து பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழுதல் ஆகியவைகள் குறித்து அனைவரும் கவரும் விதமாகவும், மெய்சிலிர்க்கும் வண்ணமாகவும், தத்ரூபமாக நாடகத்தை நடத்தினர்.
இதில் பொதுமக்களையும்,பார்வையாளர்களையும் வெகுவாக கவரும் விதமாக கிறிஸ்து சிலுவையில் அறைப்படுவதற்கு முன்னர் சாலைகளில் ரத்த காயங்களுடன் சிலுவையை சுமந்து செல்லும் இயேசு கிறிஸ்து போல் வேடம் அணிந்து அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் விதமாக நடித்துக் காட்டினர்.
முடிவில் கிறிஸ்து உயிர்த்தெழுந்து அனைவருக்கும் நற்செய்தியை அறிவிக்கும் செய்தியை கூறி கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து
ஏழை எளியவர்களுக்கு கிறிஸ்மஸ் அன்பளிப்பை வழங்கினார்.
பின்னர் பொதுவாழ்வு ஜேம்ஸ் பேராலயத்தின் தலைமை போதகர் ஐசக் டேனியல் செய்தியாளர்களை சந்தித்து…
இந்த கிறிஸ்மஸ் நன்னாளில் கிறிஸ்து பிறப்பு முதற்கொண்டு சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழும் வரை நடைபெறும் நிகழ்வுகளை நாங்கள் தத்துரூபமாக இங்கே நடித்து அனைத்து மக்களுக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்தோம் இந்நிகழ்ச்சியை தாம்பரம் கிறிஸ்துவ வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கடந்த 30 வருடங்களாக செய்து வருகின்றனர் இதன் முக்கிய நோக்கம் நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது ஆங்காங்கே சண்டை சச்சரவுகள் கலவரங்கள் ஆகியவைகள் இல்லாமல் உலக சமாதானம் அடைய வேண்டி இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம் எனவே இந்த நாளில் உலக சமாதானம் அடைந்து அனைவரும் சுபிட்சமாக வாழ வேண்டுமென கூறினார்.