
யமுனா விரைவு சாலையில் கடும் பனி மூட்டம் காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதனால் அதிகாலையில் சாலையில் முன்னால் செல்லும் வாகனங்கள் பார்வைக்கு தெரியாத நிலை உள்ளது.