தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்தது.

புயலாக உருவானதை தொடர்ந்து ஏமன் நாடு பரிந்துரைத்த ‘டிட்வா’ (DITWAH) என பெயர் சூட்டியது இந்திய வானிலை ஆய்வு மையம்.

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் சென்னைக்கு தென் கிழக்கே 700 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.