
இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் வருகை தந்தார்.
அவரை தவெக கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் தவெகதலைவர் விஜயை சந்தித்த செங்கோட்டையன், கட்சியில் இணைந்தார்.
அவருக்கு உறுப்பினர் அட்டையை நடிகர் விஜய் வழங்கினார். செங்கோட்டையனுடன், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இணைந்தனர்.
தவெகவில் செங்கோட்டையனுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.,
மேலும் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது
செங்கோட்டையன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் இணைந்து செயல்படுவார் எனவும் தெரிவிப்பு