
விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் தமிழக உரிமையினை யாருக்கு வழங்கலாம் என்ற பேச்சுவார்த்தையில் படக்குழு இறங்கியிருக்கிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ பாணியில் ஒவ்வொரு ஏரியா உரிமையினையும் தனித்தனியாக வாங்கிவிடலாம் என்று விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள். ஆனால், தமிழக உரிமையினை ஒட்டுமொத்தமாக ஒருவரிடம் தான் வழங்க வேண்டும் என்ற முடிவில் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது.
ஏனென்றால், ஒட்டுமொத்த தமிழக உரிமை விற்பனையின் மூலம் சுமார் ரூ.100 கோடி வரை எதிர்பார்க்கிறது தயாரிப்பு நிறுவனம். தனித்தனியாக விற்பனை செய்தால் இந்தப் பணம் வருமா என்பது கேள்விக்குறியாக இருக்கும் என்பதால் ஒட்டுமொத்த உரிமையும் ஒருவருக்கே என்ற நிலையில் இருக்கிறார்கள். இதனால் ’ஜனநாயகன்’ உரிமை யாருக்கு என்பது விரைவில் தெரியவரும்.