
பிஹார் தேர்தல் குறித்து ஜேவிசி நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
பிஹார் தேர்தலில் 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி அறுதிப் பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கும்.
இதில் பாஜக 70 முதல் 81 தொகுதிகளை கைப்பற்றும். அந்த கட்சி பிஹார் தேர்தலில் அதிக இடங்களை பெறும் கட்சியாக இருக்கும். ஐக்கிய ஜனதா தளத்துக்கு 42 முதல் 48 இடங்கள் கிடைக்கும். லோக் ஜன சக்தி – ராம் விலாஸ் கட்சிக்கு 5 முதல் 7, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவுக்கு 2, ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவுக்கு 2 இடங்கள் கிடைக்கும்.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணிக்கு 93 முதல் 112 தொகுதிகள் வரை கிடைக்கும். இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 69 முதல் 78 இடங்கள் வரை வெற்றி பெறக்கூடும். காங்கிரஸுக்கு 9 முதல் 17 இடங்கள் கிடைக்கலாம். இந்திய கம்யூனிஸ்ட் -எம்எல் கட்சிக்கு 12 முதல் 14, மார்க்சிஸ்ட் கட்சிக்கு 1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓரிடம் கிடைக்கும்.