கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு. கூட்டம் திரட்டுவதை பெரிய விஷயமாக்குவதை நிறுத்த வேண்டும். கிரிக்கெட்டில் கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை.
தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி,
பிரபலங்கள் கலந்துகொள்ளும்
நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படி? இது நம் திரையுலகை உலகளவில் தவறாகக் காட்டுகிறது. ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம். ஆனால், உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம்; அன்பை காட்ட வேறு வழிகள் உண்டு. ஊடகங்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றார்