
வங்கக் கடலின் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்நாளை (அக்.26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 27-ம் தேதி காலை தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும். புதிய புயலுக்கு ‘மோன்தா’ (Montha) என பெயரிடப்பட உள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரை செய்துள்ளது. இதற்குப் பொருள் ‘அழகு மலர்’ ஆகும். அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு, வட கிழக்கு திசையில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து செல்லக்கூடும். இதன் காரணமாக, இன்று முதல் 27-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 28 முதல் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.