பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி வருமாறு:-
தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக யாரும் பேசினால் அவரை பாஜகவின் பி டீம் என்று திமுக சொல்கிறது. ரஜினியை நான் அடிக்கடி சந்தித்து வருகிறேன், நட்பு அடிப்படையிலேயே அவரை சந்திக்கிறேன். எனவே அவரை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம். முதலில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு வரிகள் இருந்தன. இதனால் முதன் முறையாக ஜிஎஸ்டியை கொண்டுவந்தபோது 4 அடுக்கு தேவைப்பட்டது. இப்போது அதனை இரு அடுக்குகளாக குறைத்துள்ளோம்” என்றார்.

நீங்கள் தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, “ தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது சொல்கிறேன்” என்று அண்ணாமலை பதிலளித்துள்ளார்