
ஜிஎஸ்டி வரி கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ.7.19 லட்சம் கோடியாக இருந்தது. இது 2025-ம் ஆண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்ந்தது. நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை முன்பு 65 லட்சமாக இருந்தது. இது தற்போது 1.51 கோடியாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி நுழையும், மக்கள் கையில் பணம் புரளும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.